இது ஒரு மாதிரிக் கட்டுரை.
பொருளாதாரச் செய்தியில் முதலில் எண்ணைச் சொல்லுங்கள், பிறகு அதன் பொருளை விளக்குங்கள். உதாரணமாக, பணவீக்கம் பற்றி எழுதினால், அந்த எண் எந்த மாதத்துக்கானது, முந்தைய மாதத்தோடு ஒப்பிட்டால் கூடியதா குறைந்ததா, அதை வெளியிட்டது யார் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.
அரசு வெளியிடும் மூலத் தரவுகளை (ரிசர்வ் வங்கி, புள்ளியியல் அமைச்சகம், மாநில பட்ஜெட் ஆவணங்கள்) நேரடியாகப் பார்த்து எழுதுவது சிறந்தது. மற்றொரு செய்தித்தளத்தின் விளக்கப்படங்களை நகலெடுக்க வேண்டாம்.